இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாகத் தாய்லாந்துக்குச் சென்றுள்ளார். தனி விமானத்தில் சென்று பாங்காக் விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்ற தாய்லாந்து அதிகாரிகள் அந்நாட்டு மரபுப்படி ஒரு காப்பு அணிவித்தனர். அதன்பின் பாங்காக்கில் உள்ள மாரட் மார்க்கஸ் ஆடம்பர விடுதிக்குச் சென்ற அவரைத் தாய்லாந்து வாழ் இந்தியர்கள் வரவேற்றனர்.
தாய்லாந்து வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, குருநானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி அதன் நினைவாக ஒரு நாணயத்தை வெளியிடுகிறார். தாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூலையும் வெளியிடுகிறார்.
தென்கிழக்காசிய நாடுகள் – இந்தியா உச்சி மாநாடு, கிழக்காசிய உச்சி மாநாடு, மண்டலப் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.