மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் மீண்டும் பராமரிப்பு பணிகள்!

அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், திருவாரூரில், ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் சார்பில் கடந்தாண்டு புதிய எண்ணெய் கிணறுகள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயிகளின் கடும் எதிர்ப்பால், புதிய கிணறுகளை திறக்க கூடாது எனவும், பழைய கிணறுகளை பராமரித்து கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகளில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மறைமுகமாக ஹைட்ரோ கார்பன் பணிகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறதா என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும், விடியா திமுக அரசும் இதுபோன்ற பணிகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version