ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸில் வென்ற கொல்கத்தா அணி பந்து வீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியில் பார்த்திவ் படேலும், கோலியும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். பார்த்திவ் பட்டேல் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து டி வில்லியர்ஸ், கோலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
கோலி 43 பந்துகளில் 84 ரன்களும், டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 205 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு 206 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஒரு புறம் ரன்களைக் குவித்தாலும் மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இதனால்153 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இதையடுத்து களமிறங்கிய ரஸல்லின் அதிரடி பேட்டிங் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 7 சிக்சர் 1 ஒரு பவுண்டரி அடித்த அவர் 13 பந்துகளில் 48 ரன்களைக் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5-வது லீக் போட்டியிலும் தோல்வியடைந்த பெங்களூர் அணி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.