ரணிலுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் ஆதரவு – தமிழர்கள் ஒன்றுதிரண்டதால் ராஜபக்ஷே தரப்பு அதிருப்தி

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் கடிதம் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, அதிபர் சிறிசேனவை கொலைசெய்ய சதி செய்ததாக குற்றம்சாட்டி, பிரதமர் பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்ச நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ராஜபக்சவுக்கு போதுமான பெரும்பான்மை கிடைக்காது என்பதால் நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் உத்தரவிட்டார். இந்நிலையில், பெரும்பான்மை எம்.பி.க்களுடன் இருக்கும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கடிதம் கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே, ரணிலுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் இந்த ஆதரவு, ராஜபக்ச மற்றும் அதிபர் சிறிசேன தரப்பையும், அவர்களது ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, ராஜபக்சவின் செயலர், செயல்படவும், நிதி செலவீனங்களை மேற்கொள்ள அதிகாரம் இல்லையெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version