அதானி குழுமம் பிரதமரின் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது!!

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு, அதானி குழுமம் 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொது மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, நாட்டின் அனைத்து தரப்பிலிருந்தும், தொழில் அதிபர்களும், நிறுவனங்களும், நடிகர்களும், தனி நபர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். டாடா குழுமம் ஆயிரத்து 500 கோடி வழங்குவதாக அறிவித்தது. ரயில்வேத்துறை ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை சேர்த்து 151 கோடியும், துணை ராணுவ படையினர் 116 கோடியும், பிசிசிஐ 51 கோடியும் வழங்கியது. இதே போன்று ஏராளமானோர் 500, ஆயிரம் என தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், அதானி குழுமம் 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதானி குழும உரிமையாளர் கவுதம் அதானி, இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசுக்கும் மக்களுக்கும் தேவையான கூடுதல் உதவிகளை தங்களது குழுமம் செய்யும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version