இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் 'ப்ளோரானா'

கொரோனா, ஒமிக்ரான் பரவல் கட்டுக்குள் வராத நிலையில், இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன், சாதாரண காய்ச்சலுக்கான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதால், இதற்கு ‘ப்ளோரானா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில், அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, ‘ப்ளோரானா’ வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பெண், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் என்பதும், மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கொரோனா பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா, ஒமிக்ரான் பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், இஸ்ரேலில் புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள தகவல், உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே சமயம், ப்ளோரானாவின் தாக்கம், கொரோனா போன்று கடுமையாக இருக்குமா..? அல்லது குறைவாக இருக்குமா..? என்பது ஆய்வுக்கு பிறகே தெரிய வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version