ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு பரிந்துரை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியிருந்தது.

இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முதல் டோஸ், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், மருந்து ஆலோசனைக்கான நிபுணர் குழு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை சுமார் 169 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கும் அனுமதி கிடைத்தால், தடுப்பூசி செலுத்தும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்.

Exit mobile version