துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதான இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஜாமினில் விடுதலை

இலங்கையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அர்ஜுன ரணதுங்க ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பத்தால் அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளரான அர்ஜுன ரணதுங்க, பெட்ரோலியத்துறை அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, அதிபர் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் அவரை தடுக்க முயன்றனர்.

இதையடுத்து, ரணதுங்கவின் பாதுகாவலர்கள், அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாவலர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்துக்கு செல்ல முயன்ற அர்ஜுன ரணதுங்கவை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். 5 லட்சம் ரூபாய் ஜாமினில் கொழும்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

Exit mobile version