குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காம்பியா பயணத்தை முடித்துக் கொண்டு கினியா நாட்டிற்கு சென்றுள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளான பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28ஆம் தேதி பெனின் சென்ற அவர் அந்நாட்டு அதிபர் தாலோனை சந்தித்து பேசினார். மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு காம்பியா நாட்டிற்கு சென்ற குடியரசுத் தலைவர், அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. காம்பியா பயணத்தை முடித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது கினியா சென்றுள்ளார். தலைநகர் கொனாக்ரி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் மற்றும் தலைவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசுகிறார்.