” தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாட்டம்” – குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கிறார்!

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி உருவாக்கப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான். அதன்படி, இந்த ஆண்டின் தேசிய வாக்காளர்கள் தினத்திற்கான கருப்பொருள் “வாக்களிப்பதைப் போன்று வேறில்லை, நான் உறுதியாக வாக்களிக்கிறேன்” என்பதாகும். தலைநகர் டெல்லியில் நடைபெறும் 13வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் 2022ஆம் ஆண்டில் தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் தேசிய விருதுகளை வழங்க உள்ளார்.

Exit mobile version