ராமநாதபுரத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை, மின் மயானத்தில் எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல், அல்லிக்கண்மாய் இடுகாட்டில் எரியூட்டப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நோய் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த மின்மயானத்தில் இரவு வரை உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.
அடிக்கடி எந்திரக் கோளாறும் ஏற்படுவதால், உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட அவர்களது உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் அலட்சியம் கொள்ளாமல், மின் மயானத்தில் மேலும் ஒரு மின் தகன மேடை அமைக்க, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.