ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து பொதுவேலை நிறுத்தம்!

ராமநாதசுவாமி கோயில் சன்னிதானத்தை சுற்றிவந்து ராஜகோபுரம் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், இந்த வழியில் கம்பி வேலியை அமைத்து சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தனியார் பாதுகாவலர்களைகொண்டு பக்தர்களிடம் அடக்குமுறையை கையாள்வதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ராமநாதசுவாமி கோயிலின் துணை ஆணையாளரை கண்டித்து அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வரும் 31ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ராமேஸ்வரம் பாரம்பரிய பாதுகாப்பு பேரவை அமைப்பு
அறிவித்துள்ளது.

Exit mobile version