சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

சீனாவில் கொரோனாத் தொற்று மீண்டும் வலுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 13 முதல் 19 வரை உள்ள 5 நாட்களில் சுமர் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பினால் இறந்துள்ளார்கள். இந்த இறப்புக் குறித்து சீனா அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடாத நிலையில் பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள வூகானில் கொரோனாத் தொற்று பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இந்தத் தொற்றுப் பரவி பலகோடி உயிர்களை கொன்று தீர்த்தது. கிட்டத்தட்ட 70கோடி நபர்கள் கொரோனாத் தொற்றால் இறந்துள்ளனர். சீனா தற்போது கொரோனாத் தடுப்பிற்கு பாரம்பரிய மருந்துக்கு மாறிவரும் நிலையில் இந்தப் புள்ளி விவரத் தகவல் மிகவும் அதிர்ச்சியினை அளித்துள்ளது. ஏற்கனவே சீனா ‘ஜீரோ கோவிட் தொற்று’ என்று அறிவித்து பல கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி தொற்றினைக் குறைத்திருந்தது.

இப்படி இருக்க கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60,000 பேர் கொரோனாத் தொற்றால் இறந்துள்ளனர். சீன அரசு ஜனவரி 13 முதல் 19 தேதி வரை உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிடும்போது 681 பேர் கொரோனாத் தொற்றாலும், 11,977 பேர் இதர உடல் நோய்களாலும் இறந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக கருதிய பிரிட்டனைச் சேர்ந்த ஏர் பினிட்டி என்கிற நிறுவனம் அந்த 5 நாட்களில் இறந்தவர்கள் எல்லோருமே கொரோனாத் தொற்றால்தான் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறியுள்ளது. மேலும் சமீபத்த்தில் சீனாவில் சந்திரப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் 20கோடி பேர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடினர். அதற்கு சீன அரசு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்காததால் வரும் காலங்களில் சீனாவில் கொரோனாத் தொற்று அதிகரிகும் என்று பிரிட்டனைச் சேர்ந்த அந்நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது.

Exit mobile version