இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 6000ஐ கடந்தது – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு நேற்றைய தினம் 5 ஆயிரத்தை கடந்த நிலையில் , கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 28,303ஆக உயர்வு.கடந்த 24 மணி நேரத்தில் , 3,320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், 13 பேர் உயிரிழப்பு.தினசரி பாதிப்பு விகிதம் 3.39 சதவீதம் ஆகவும் , வாராந்திர பாதிப்பு விகிதம் 3.02 சதவீதமாகவும் உயர்வு. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 0.06 சதவீதமாகும்., என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,533 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version