ரஜினி-ஏஆர்.முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

கடைசியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த், அடுத்ததாக இயக்குநர் ஏஆஎர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் பெயரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் கதைக்களம் மும்பையை அடிப்படையாகக் கொண்டது என்பது முதல் பார்வையில் தெளிவாகத் தெரிகிறது. மாஸ் ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும் தர்பார் படத்தின் படப் பிடிப்பை மும்பையில் நாளை துவங்க திட்டமிட்டுள்ளனர். 

Exit mobile version