மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ராகுல் காந்தி ஆர்வம் காட்டததால், அமேதியில் அவர் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி, அமேதி மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகின்றன. அமேதி தொகுதியில் இருந்து 2004ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்று முறை எம்பியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த தொகுதியில் சஞ்சய் காந்தி, தந்தை ராஜிவ் காந்தி உள்ளிட்டோரும் போட்டியிட்டு எம்பிக்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். நான்காவது முறையாக அமேதியில் போட்டியிட்ட ராகுல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை 2வது முறையாக எதிர்கொண்டார். ஆனால், அவர் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியத்தில் ராகுல் தோல்வியை தழுவினர். காங்கிரசின் அசைக்க முடியாத தொகுதி என்று கருதப்பட்ட அமேதியில் தோல்வியடைய அவரது செயல்பாடுகளே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளாதது, தந்தையின் பெயரை பயன்படுத்தி வெற்றி பெற நினைத்தது தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பாஜக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், பிரதமர் மோடியின் ஆளுமை மிக்க ஆட்சி ஸ்மிருதி இரானியின் வெற்றிக்கு காரணம் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.