பிரதமர் மோடியை உறக்கத்தில் இருந்து நாங்கள் எழுப்புவோம் – ராகுல்காந்தி

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு உறக்கத்தில் இருக்கும் பிரதமர் மோடியை எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு உறக்கத்தில் இருந்த அசாம் மற்றும் குஜராத் முதல்வர்களை எழுப்பி விட்டோம் என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, அடுத்து பிரதமர் மோடியை உறக்கத்தில் இருந்து எழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயக் கடன் தள்ளுபடி இருக்கும் என்று ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version