ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி – ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் இக்கருத்தை தெரிவித்த அவர், ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும் விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க புதிய பசுமைப் புரட்சி அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version