காங். காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதம் நிராகரிப்பு

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி அளித்த ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் அக்கட்சி, 2-வது முறையாக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

இந்தநிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ராகுல் காந்தி, இன்று டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதத்தை காரிய கமிட்டி ஏற்க மறுத்துள்ளது.

Exit mobile version