அவதூறு வழக்கில் ராகுல் இன்று நேரில் ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

அவதூறு வழக்கு விசாரணை தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில், வழக்கை நீதிமன்றம் அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி குறித்து விமர்சித்து இருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் அஜராகவில்லை.

இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை நீதிமன்றம் அடுத்த மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் அகமதாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version