பிரதமர் பற்றிய கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய அமைச்சர்

பிரதமர் மோடிக்கு எதிராக கூறிய கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கோரியதையடுத்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி கேட்க எழுந்தபோது, பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகளை முதலில் கண்டிக்க விரும்புவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

Exit mobile version