ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்: ராகுல் காந்தி

ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நியாம் பெற உதவுவோம் என்றார். குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்க திட்டம் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வீதம் 20 சதவிகிதம் ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 5 கோடி குடும்பங்களில் உள்ள 25 கோடி மக்கள் பயன் பெறுவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Exit mobile version