வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ராகுல்காந்தி தாக்கல் செய்தார்

மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டில் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் துவங்கியுள்ள நிலையில், ராகுல்காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டாவுக்கு பேரணியாக சென்ற அவர், ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தார். தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் சென்றனர். அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version