பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடியை திருடன் என கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல் காந்தி, காவல்காரனே திருடனாகி விட்டதாக குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றம் தெரிவிக்காத ஒரு கருத்தை ராகுல் பேசி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் இருமுறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராகுல் காந்தி, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் 3 பக்கங்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள ராகுல் காந்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.