பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
2-வது முறையாக பிரதமராக, நரேந்திர மோடி நாளை பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நாளை நடைபெறவுள்ள பிரதமர் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் பங்கேற்வுள்ளனர்.
இதேபோல், பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகெல், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நாளை ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கவுள்ளார். இதில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்வுள்ளனர். இதனால் இவர்கள் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கபோவது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.