பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கக் கட்டுப்பாடு: வங்கியின் வாடிக்கையாளர்கள் போராட்டம்

பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் மோசடி நடைபெற்றதைக் கண்டித்தும் தங்கள் வைப்புத் தொகையை முழுவதும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கோரியும் மும்பையில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் நாலாயிரத்து 355 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதையடுத்து எச்டிஐஎல் என்கிற நிறுவனத்தின் மூவாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தக் கோரியும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மும்பை கிழக்கு அந்தேரியில் உள்ள வங்கிக் கிளை முன் வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Exit mobile version