தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ‘Absent’; ஆளுநர் தமிழிசை ‘Present’! றெக்கை கட்டும் ஊகங்கள்!

tamilisai soundarrajan

தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியது குறித்தும், புதுச்சேரி முதல்வர் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

தென்மண்டல மாநிலங்களுக்கான கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டது, பல்வேறு கேள்வியை எழுப்பி உள்ளது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமையை ஆளுநர் வழங்க வேண்டுமெனவும், அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டுடிருந்தால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.

Exit mobile version