தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வாழ்த்து

கன்னியாகுமரியில் நடந்த பொங்கல் விழாவில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார அனைத்து இந்து சமூதாயம் சார்பில், பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது. அருமனை புண்ணியம் சந்திப்பில் இருந்து துவங்கிய ஊர்வலம், அருமனை சந்திப்பில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சிங்காரி மேளம், ஒயிலாட்டம், இதிகாசங்களை பிரதிபலிக்கும் பொம்மலாட்டம் என நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். விழாவை காண தமிழக மக்கள் மட்டுமின்றி,  கேரளாவில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

மேலும், இந்த பொங்கல் விழாவில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, ஆளுநர் என்று சொல்வதை விட அக்கா என்று சொல்வதே தனக்கு பிடிக்கும் என்றார். மேலும், உங்கள் சகோதிரியாவும், தெலுங்கானா ஆளுனராகவும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Exit mobile version