வீணை தயாரிக்கும் 22 பேருக்கு அங்கீகார சான்றிதழ்கள்

தஞ்சையில் வீணை தயாரிக்கும் 22 பேருக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வீணைகள் தயாரிப்பு இருந்தாலும், தஞ்சையில் தயாரிக்கப்படுகிற வீணைகளுக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இந்த வீணைகள் தனித்துவம், பாரம்பரியம், கலைநயம், வரலாற்று பூர்வீகம் ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டதாகும். இதனால், தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வீணை தயாரிக்கும் 22 பேர் புவிசார் குறியீடு அங்கீகாரத்திற்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு புவிசார் குறியீட்டின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை, அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்க தலைவர் சஞ்சய்காந்தி வழங்கினார்.

Exit mobile version