கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெறும் இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்பி எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் அங்கு செல்பி எடுப்பதால் அகழ்வராய்ச்சி பள்ளங்களில் தவறி விழுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், ஆராய்ச்சி பணிகள் தடை படுவதாகவும் கருதப்படுகிறது.
இதனால் அப்பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை சார்பில் விளம்பர பதாகை நடப்பட்டுள்ளது. செய்தித்துறையை சார்ந்தவர்களிடம் உரிய அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.