தனியார் தொலைக்காட்சிகளை மிஞ்சும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசு கேபிளில் 200 வது சேனலாக 24 மணி நேரமும் தொடர்ந்து கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியினை துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகளின் எண்னிக்கை உயர்த்தப்பட்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், சிறுவயதிலேயே உயர்ந்த குறிகோள்களை கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடும் என்றும், இத்தொலைக்காட்சி அரசு கேபிளில் 200 வது சேனலாக 24 மணி நேரமும் தொடர்ந்து கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பபடும் என்றும் தெரிவித்துள்ளார்.