கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் கணவருடன் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா..

கலிபோர்னியாவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் பங்கேற்றுள்ளார்.

ஆஸ்கார் விருதுக்கு இணையாக கருதப்படும் 77வது கோல்டன் குளோப்  விருது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

 

இதில் ஹாலிவுட் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவிற்கு பிரியங்கா பிங்க் நிற உடையிலும், ஜோனஸ் கருப்பு நிற கோட்சூட் அணிந்தும் வந்திருந்தார். இருவரின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version