செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற தனியார் பேருந்து, மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது பேருந்துக்குள் சிறுவன் உட்பட 2 சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் பேருந்தை தூக்கி நிறுத்தினர். அதன்பிறகு பேருந்துக்குள் சிக்கி கொண்டவர்கள் மீட்கப்பட்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.