தனி விமானம் மூலம் கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிஷ்கேக் நகருக்கு இன்று தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிஷ்கேக் நகருக்கு புறப்பட்டு சென்றார். அவரது விமானம் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்து ஓமன் வழியாக பிஷ்கேக் நகருக்கு செல்கிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் கூடுதலாக 4 மணிநேரம் பயணிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கூடிய சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version