வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வான மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுவது பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், இன்று துவங்கியது. நாட்டின் உயரிய அவையாக கருதப்படும் மாநிலங்களவையின் 250வது கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று சிறப்பு மிக்க 250வது மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.
மாநிலங்களவையின் 250வது கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையாக கருதுவதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்தில் மாநிலங்களவை முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்தார். பெருமை மிக்க இந்த சபையில், முக்கிய சட்டங்கள் நிறைவேறியுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, நாட்டின்பன்முகத்தன்மையை மாநிலங்களவை பிரதிபலிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய எதிர்கட்சிகள் ஒத்தழைப்பு தர வேண்டும் என்று கூறினார். எந்த ஒரு விவகாரத்தையும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக உள்ளதாக கூறிய அவர், அமளியில் ஈடுபடுவதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காண்போம் என எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post