உலகின் நீளமான ’அடல்’ சுரங்கப் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் கனவுத்திட்டமான இதில், இமாச்சல பிரதேசத்தின் மணாலிக்கும், லடாக்கின் லே பகுதிக்கும் இடையே சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் வகையில், ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்பத்தில் 4.000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,100 மீட்டர் உயரத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.