பீகாரில் மூளைக்காய்ச்சலால் நேர்ந்த உயிரிழப்புக்கு ஆட்சியிலிருந்த தாங்கள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உருக்கமாக உரையாற்றினார்
மாநிலங்களவை குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பீகாரில் மூளைக்காய்ச்சலால் நேர்ந்த உயிரிழப்புக்கு ஆட்சியிலிருந்த தாங்கள் தான் காரணம் என்றும், அதை முக்கியப் பிரச்னையாக கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். ஏழைகள் பயன்பெறும் வகையில் சிறந்த மருத்துவ பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற வன்முறையில் தவறு செய்தவர்களை தனிமைப் படுத்தவேண்டுமே தவிர, ஒட்டுமொத்த மக்களை தனிமைப் படுத்தக்கூடாது என்றும், ந வன்முறைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தாங்களும் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது குற்றம் சாட்டவில்லை என்றும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் நாடுமுழுவதும் 226 மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்னைகள் நாடாளுமன்ற உறுப்பினர் நிதிமூலம் தீர்வு காணப்படும் என்றார்.
Discussion about this post