"போலி வேலைவாய்ப்பு மோசடியை தடுத்திடுக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவில் வேலைவாய்ப்பு என கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் மோசடியை, முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வு, ஒமிக்ரான் அச்சம் என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் போலி வேலைவாய்ப்பு இப்போது புதிதாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இதுதொடர்பாக காவல்துறையில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, புகாரை தீர விசாரித்து மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version