ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக ராம் ஜெத்மலானி காலமானார். அவரது மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ராம் ஜெத்மலானியின் இறப்பு வருத்தம் அளிப்பதாகவும், பொதுப் பிரச்னைகள் குறித்த தனது கருத்துகளை சொற்பொழிவின் மூலம் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்தவர் ராம் ஜெத்மலானி என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறை சிறந்த ஆளுமையை இழந்துள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராம் ஜெத்மலானி இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராம் ஜெத்மலானியின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

இதேபோல், ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராம் ஜெத்மலானி தனது மனதில் பட்டதை வெளிப்படையாகவும், தைரியமாகவும் கூறுபவர் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அவசர நிலையின் போது அவரது துணிச்சலான போராட்டம் என்றும் நினைவில் வைக்கப்படும் எனவும், மற்றவர்களுக்கு உதவுவது அவரது ஆளுமைக்கு சிறந்த பண்பாகும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version