பசிபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் பப்புவா நியூ கினியாவும் ஒன்றாக உள்ளது. இந்தநிலையில், பலோலோ நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.