சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தபால் வாக்குகளை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி துவங்கியது.
சென்னையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உறுதியானவர்கள் என, 7 ஆயிரத்து 300 பேர் தபால் வாக்குகள் செலுத்தவுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, தபால் வாக்குகளை வீடுகளுக்கே சென்று சேகரிக்க மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சென்னையில் இன்று தொடங்கி, வருகிற 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், தபால் வாக்குகளை சேகரிக்க, 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, பிரத்யேக பெட்டியினுள் வைத்து சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.