காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் வாக்களிக்கும் வகையில் கடந்த தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்கு பதிவு தொடங்கியது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு பதிவு விழுப்புரம் செஞ்சுலுவை சங்கம் வளாகத்தில் நடைப்பெற்று வருகிறது. மாவட்டத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 228 காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை, ஓய்வு பெற்ற காவல்துறை, உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்கு பதிவு செய்யவுள்ளனர். இதில் தவறும் காவலர்கள் மே 23 ம் தேதி வரை வாக்கு பதிவு செய்து தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துக்கொண்டார்

இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் 900 மேற்பட்ட காவலர்கள் வரிசையில் நின்று அங்கு வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட வாக்கு பெட்டியில் தங்களுடைய தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையே, சென்னை உட்பட 6மக்களவை தொகுதிகளில் காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கான தபால் வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மக்களவை தொகுதிகளுக்கு ஆறு மையங்களில் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது.

Exit mobile version