ஆட்டோவை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளருக்கு சாபம் விட்ட ஆட்டோ ஓட்டுநர்

சென்னை பிரோட்வேயில் காவல்துறை பெண் உதவி ஆய்வாளரிடம், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆவேசமாக பேசி சாபம் வீடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிராட்வே சாலையில் முத்தியால் பேட்டை காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி இ-பதிவை ஆராயும் போது, போலி காரணம் கூறி இ-பதிவு பெற்றது தெரியவந்துள்ளது. ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அஸ்கர், உதவி ஆய்வாளர் கிருத்திகாவிடம் ஆவேசமாக பேசி, சாபம் விட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மதுவிலக்கு பிரிவு காவலரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற தந்தை, மகன் உட்பட நால்வரை காவல்துறை கைது செய்தது. மூலக்காட்டுத் தோட்டம் என்ற பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதை அறிந்து காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது மது விற்றுக்கொண்டிருந்த நடராஜன், அவரது மகன் சுதன், முத்துசாமி, சட்டாம்பிள்ளை, லோகேஸ்வரன் ஆகியோர், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதில், 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய லோகேஸ்வரனை தேடி வருகின்றனர்.

 

Exit mobile version