ஆட்சிக்கு வந்தபின் பாராமுகம்… பூவுலகின் நண்பர்களைக் கெஞ்சவிடும் திமுக

சமூக நீதி, சாதி ஒழிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு மொத்த குத்தகை எடுத்ததே திமுக தான் என்பதுபோன்ற தோற்றமயக்கத்தை நம்பி, திமுகவுக்கு ஆதரவளித்த சென்னையைச் சேர்ந்த சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்களை, ஆட்சிக்கு வந்ததும் கண்டுகொள்ளாமல் கதறவிட்டு வருகிறது திமுக.

கூடங்குளம் அணுவுலையில் 5,6ஆவது யூனிட் அமைக்கும் பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. ஆனால், கூடங்குளம் அணுவுலையிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்காக அணுவுலை அருகில் “அணுக்கழிவு மையம்” இன்னும் அமைக்கப்படவில்லை. அணுக்கழிவுகளை நிரந்தரமாக கையாளும் வழிகளில் ஒன்றான ஆழ்நில அணுக்கழிவு மையத்தை எங்கே அமைப்பது என்றும் முடிவாகவில்லை. ஆனால் கூடங்குளத்தில் 5&6 உலைகளுக்கான பணிகளை அரசு துவக்கியுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் அணுசக்தி கழகம் இதுகுறித்து பேசியபோது, “இம்மாதிரியான மையங்களை இந்திய பொறியாளர்கள் அமைத்தது கிடையாது என்று தெரிவித்திருந்தனர். இந்த மையம் அமைந்துவிட்டால் கூட அணுக்கழிவுகளை நிரந்திரமாக கையாள முடியாது. கூடங்குளம் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் கிடையாது என்றும் தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில், இதுகுறித்துப் பூவுலகின் நண்பர்கள் குழு முதல்வரிடம் கோரிக்கை வைத்துப் பார்த்துள்ளது. ஆனால், திமுக அரசு பாராமுகம் காட்டிவருவதால், இந்த விவகாரத்தை ட்விட்டருக்குக் கொண்டு வந்துள்ளார் அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன்.

குறிப்பாக, அந்த ட்வீட்டில் “இதனால்தான் சொல்கிறோம் முதல்வரே…” என்ற கதறலுடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரையும் இணைத்து கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், கூடங்குளத்தில் தற்போது 5, 6ஆவது யூனிட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version