வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு நிதி உதவி அறிவித்து சிக்சர் அடித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் நத்தம் சாலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மு.க.ஸ்டாலினால் வாதங்களை வைக்க முடியவில்லை என்று தெரிவித்தார். மக்களை குழப்பவே கிராம சபை கூட்டத்தை திமுக நடத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.