விடுபட்ட அட்டை தாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு

விடுபட்ட அட்டை தாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பணத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதைதொடர்ந்து அரிசி, சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களான 1.98 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் விடுபட்டவர்களுக்கு ஞாயிறு, திங்கள் கிழமைகளில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version