கம்பம் பள்ளத்தாக்கில் குளங்கள், ஏரிகள் தூர்வாரும் பணி தீவிரம்

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஏரி, குளம் மற்றும் கண்மாய்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குளங்கள் மட்டும் ஏரிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் எடுக்கப்படும் மண்ணானது, டிராக்டர்கள் மூலம் விவசாய நிலங்களில் கொட்டப்படுகிறது. மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறாமல் இருக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் வறட்சி காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version