தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

 

சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவீதமும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 32.29 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 37.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version