ஜனநாயக கடமை ஆற்றிய வேட்பாளர்கள் – நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அதிமுக வேட்பாளர், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது சொந்த ஊரான ஓரட்டியம்புலத்தில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி செங்கோட்டையில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் தனது சொந்த ஊரான தாமரைக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி தனது சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் தனது சொந்த கிராமமான அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் நைனாகண்ணு வடமாத்தூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இளவழகன் மேல்விஷாரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் கணேசன், வாலாஜாபாத் பேரூராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.வி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் தனது சொந்த ஊரான பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் பரமசிவம் திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணி, அவரது சொந்த ஊரான பெரியேரிப்பட்டி ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் தனது சொந்த கிராமமான எளம்பலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவை மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் தனது சொந்த ஊரான பண்டாரவிளையில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

 

Exit mobile version