காவல்துறையினர் எனக் கூறி நகைகள் கொள்ளை

கோவையில் ஆட்டோவில் சென்ற நகை வியாபாரியை வழிமறித்து, காவல்துறையினர் என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையன் நகைக்கடை வைத்துள்ளார். கோவையில் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு, சின்னையன் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பெரியகடை வீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தி விநாயகர் கோயில் அருகில் நின்றிருந்த 2 பேர், சின்னையன் சென்ற ஆட்டோவை வழிமறித்துள்ளனர். காவல்துறையினர் எனக் கூறி சின்னையா வைத்திருந்த 650 கிராம் தங்க நகைகளை பிடுங்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து சின்னய்யா பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து பெரியகடைவீதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version